SIR திருத்த பணிகளில் TBS

SIR திருத்தப் பணிகளில் TBS Tamilnadu அமைப்பு முக்கியமான சமூக முயற்சியை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக TBS தமிழ்நாடு இணை நிறுவனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், TBS சார்பாக  1 லட்சம் வாக்காளர்களை நேரடியாக தொடர்புகொண்டு, அவர்கள் வாக்குகளை உறுதி செய்யும் பெரிய முன்னெடுப்பை செயல்படுத்துகிறோம்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை, இந்த 1 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறுவதை தொடர்ந்து கவனிப்பதும், உறுதி செய்வதும் எங்களின் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.

6.50 கோடி வாக்காளர்களை ஒப்பிடும்போது 1 லட்சம் என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாக இல்லாமல் தோன்றலாம். ஆனால் இந்த முயற்சியை மக்களிடம் பரவலாக கொண்டு செல்வதன் மூலம், பல்வேறு சமூக தளங்களில் இதற்கான முக்கியத்துவத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்  செயல்படுவதாக தெரிவித்தார்.

இதற்காக TBS சார்பில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படுகிறது எனவும்,

இதில்  இணைந்து பணியாற்ற விரும்புவோர், தங்களது விருப்பத்தை TBS சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

70% பணிகள் ஆன்லைன் மூலமாகவும், 30% பணிகள் நேரடி களப்பணியாகவும் இருக்கும் இந்த பணி சமூக மாற்றத்திற்காக நேரத்தை செலவிட விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Spread this Article Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *