இந்தியப் பெண்கள் இன்றைய விளையாட்டு உலகில் தங்கள் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பல துறைகளில் தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களையும், உலக சாம்பியன்ஷிப் கோப்பைகளையும் வென்று, நாட்டின் பெயரை உலகளவில் உயர்த்தி வருகின்றனர். அவர்களின் உழைப்பும் தன்னம்பிக்கையும் இந்திய இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.
இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் சமீபத்திய சாதனைகள் :
தடகளம்:
400 மீ Relay – ஆசிய விளையாட்டு போட்டி – தங்கம் வென்ற பரம்ஜீத் கௌர் மற்றும் ஜோத்ஸ்னா சர்மா
பேட்மிண்டன் – உலக லீக் சுற்று – வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து.
குத்துச்சண்டை – மகளிர் உலக சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னி.
ஹாக்கி – ஆசிய சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற கேப்டன் சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி
மகளிர் கிரிக்கெட் – 2025 உலகக் கோப்பை – உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
கபடி – ஆசிய U18 சாம்பியன்ஷிப் கோப்பை – ஆசிய சாம்பியன் ஆன இந்திய அணி.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணகி நகர் கார்த்திகா ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் ஈர்த்து சிறந்த ஆட்டத்திற்கான தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்திய பெண்கள் இன்றைய விளையாட்டு உலகில் தங்கள் உறுதி, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பால் புதிய வரலாறு எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வெற்றிகள் இந்தியாவின் விளையாட்டு வளர்ச்சிக்கும், மகளிர் வலிமைக்கும் அடையாளமாகின்றன.
அவர்கள் வென்ற ஒவ்வொரு பதக்கமும், இந்திய மகளிரின் எதிர்காலத்தை ஒளிரச் செய்கிறது.
நம் வீட்டுப் பெண்களும் உலக அரங்கில் முன்னேற அவர்களை வாழ்த்தி வழி கொடுப்போம்.
